Thursday, December 3, 2009

கவிதைச்சரம்

பரண்

ப்பா காலம்வரை
கட்டப்பட்ட
அத்தனை வீடுகளிலும்
அறைகள் இருந்தனவோ
இல்லையோ,
நிச்சயமாய்
பரண்கள் இருந்தன.
பழையன கழிந்தனவோ
இலையோ
கண்டிப்பாய்
பரண் ஏறின.
ஒவ்வொரு வருடமும்
போகிக்குப் பரண்கள்
ஒழுங்குப்படுத்தப்படும்.

என்றேனும் ஒருநாள்

தேவைப்படும் என்று

பரண் ஏறிய பொருட்கள்

சீனியாரிட்டி அடிப்படையில்

சீக்கிரமாய் விடைபெறும்.

சம்பளம் சற்று

அதிகமானவுடன்

பூர்வீக வீட்டை இடித்துவிட்டு

மார்டனாய் அமைந்ததென்

புது வீடு.

எக்ஸ்சேஞ்ச் மேளாவில்

பொருள் மாற்றம்

நடப்பதால்

பொருட்களோடு

பரணும் விடைப்பெற்றது.

'மாத்திரை

நேரத்துக்குச் சாப்பிடுங்க,

உடம்பைக்

கவனமாய் பார்த்துக்கங்க'

சொல்லிவிட்டு

என் மகன்

வேலைக்காக

விமானம் ஏறியபோது

வீடே பரணாய்

மாறிப்போனது !


எம்.எம்.அப்துல்லா


**********


இன்னும்...


கால் ஒடிந்த காக்கைக்கு

எப்படி நேர்ந்தது

அந்த விபத்து?

அடைமழை பெய்யும்போது

அணில்கள்

எங்கே உறையும்?

நடுநிசியிலும் குரைக்கும்

நாய்கள் எப்போதுதான்

உறங்கும்?

எல்லார் வீட்டிலும்

விரட்டப்படும் பூனைக்கு

யார்தான் சோறிடுகிறார்கள் ?

ஏழெட்டு எறும்புகள்

ஏலேசா பாடி

தூக்கிச் செல்லும் பருக்கை

கூட்டிச் சென்றடைகின்றதா?

சின்ன வயதில்

தோன்றிய கேள்விகள்...

இன்னும்

விடை கிடைக்கவில்லை.

என்ன, இப்போது

இந்த மாதிரி

அசட்டுக் கேள்விகள்

தோன்றுவதில்லை !


கே.பி.ஜனா


**********


ஏக்கம்


சிறு வயதில்

பக்கத்து வீட்டு

பரிமளத்தோடு

விளையாடிய

அம்மா அப்பா

விளையாட்டும்,

அவளோடு போட்ட

குடுமி பிடிச்சண்டையும்

இன்றைக்கு நினைத்தாலும்

மனசுக்கு இதமாய்...!

வயசைக் கடந்தும்

வரம்பு மீறும்

மனசின் ஏக்கம்

கடந்த காலம் நோக்கி

விரைந்து செல்லும்.

நீளாது முடிந்த

காலப்பதிவை

விரசமின்றி

சாடிச்சபிக்கும்.


சுக்ரன்

1 comment:

கமலேஷ் said...

உங்க வீட்டு பக்கத்துலயும் பரிமளாதானா
ரொம்ப நல்லா இருக்கு...