Wednesday, December 2, 2009

முகாம்களில் இருந்து வெளியே சென்று வர தமிழர்களுக்கு அனுமதி

லங்கையில் வவுனியா பகுதியில் உள்ள முகாம்களில் தற்போது சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். இவர்கள், வெளியே சென்று வர இருந்த தடையை அரசு இப்போது நீக்கி இருக்கிறது. அதாவது, முகாம்களில் உள்ளவர்கள் தங்களை பற்றிய விவரங்களை அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு வெளியே சென்று உறவினர்களை பார்த்து வர இலங்கை அரசு அனுமதி அளித்து உள்ளது.

இந்த தகவலை இலங்கை மறுகுடியமர்த்தல் மற்றும் பேரழிவு நிவாரண பணிகள் துறை மந்திரி ரிசாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.

முகாம்களில் இருந்த 3 லட்சம் தமிழர்களில் கணிசமான பேர் ஏற்கனவே அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை அரசு ஏற்கனவே கூறியது. இப்போது முகாம்களில் மீதம் இருப்பவர்கள் தடையின்றி வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறது.

No comments: