Tuesday, December 1, 2009

இன்று உலக எய்ட்ஸ் நாள்

லக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

1988- 2004 வரையான எய்ட்ஸ் நாள் யுஎன்எய்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2005 முதல் இப்பொறுப்பு "உலக எய்ட்ஸ் பிரச்சாரம்" (The World Aids Compaign) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எய்ட்சை பற்றி சில ...

எய்ட்ஸ் என்றால் என்ன?

பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ். எச்..வி எனும் வைரசால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவர் எச்..வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.

எச்..வி மற்றும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

எய்ட்சால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எச்..வி இருக்கும். எச்..வி தாக்கப்பட்ட அனைவரும் எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது. ஆனால், எச்..வி தொற்று உள்ளவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாக மாறுகிறார்கள்.

யாருக்கு எய்ட்ஸ் வரும்?

எச்..வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்..வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான். 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்குத்தான் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவராக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். "நீங்கள் எப்படி பட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்..வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்'' என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்..வி தொற்றுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா?

எச்..வி தொற்றியவுடன் எந்த அறிகுறியும் இருக்காது. அவர் மற்றவர்களைப் போலவே சாதாரணமாகவே தனது வாழ்க்கையின் கடமைகள் அத்தனையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இந்த காலகட்டத்தில் சிறுசிறு நோய்கள் (நோய் தாக்குதல்களுக்கு ஆளாகாதோரைப் போலவே) வந்து போகும். இது எல்லோருக்கும் வரும் நோய்தானே என்பதால் எச்..வி யால் தாக்கப்பட்டவருக்கு தான் இந்நோயால் தாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டார். எச்..வி யால் தாக்கப்பட்டிருப்பதை ரத்தப் பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும்.

எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?

 • பாதுகாப்பற்ற முறையில் ஒருவர் பலருடன் உடலுறவு கொள்தல்.
 • பலருடன் உறவு கொள்பவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு.

 • பயன்படுத்திய ஊசிகளை சுத்தப்படுத்தாமல் மீண்டும் பயன்படுத்துவது.

 • பரிசோதனை செய்யாத ரத்தத்தை பெற்றுக் கொள்தல்.

 • கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்..வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவுக்கு எச்..வி தொற்று பரவ வாய்ப்பு.


எய்ட்ஸ் எப்படி பரவாது?

 • சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களின் மூலம் பரவாது.

 • கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது.

 • பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது.

 • நீச்சல் குளம் மூலம் மற்றும் சலுõன் கடைகள் மூலம் பரவாது.

 • ஒவ்வொரு முறையும் துõய்மையாக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் ரத்த தானம்.

 • இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலம் பரவாது.

எய்ட்ஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இதுவரை எய்ட்ஸை குணமாக்க எந்த மருந்தும் கண்டறியாத போது, நாம் கவனமுடன் நடந்து கொள்வதன் மூலம்தான் அதை தடுக்க முடியும். பொறுப்புடனும் பாதுகாப்புடனும் நடந்து கொண்டால் இந்த நோயை விரட்ட முடியும். எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர் அதுபற்றி தெரியாமலே அந்நோயை பரப்பிக் கொண்டிருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


No comments: