Monday, December 7, 2009

இந்தியா 'நம்பர் 1'


77 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும் இந்திய அணி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (.சி.சி.) டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதல் முறையாக நம்பர் ஒன் இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்திருக்கிறது.

'நம்பர் ஒன்' அரியணையில் ஏறுவதை லட்சியமாக கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணி திட்டமிட்டு செயல்பட்டு வந்தது. தரவரிசையை பற்றி அதிகம் சிந்திக்காமல் ஒவ்வொரு தொடரிலும் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டு, படிப்படியாக மேற்கண்ட இலக்கை அடைய வேண்டும் என்பது நோக்கமாகும்.

அணியின் தலைமை பொறுப்பை டோனி ஏற்ற பிறகு இந்திய அணி எழுச்சி பெற்றது. தற்போதைய இலங்கை தொடருக்கு முன்பாக டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தது. தொடரை வென்றதன் மூலம் 124 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருக்கிறது. முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்கா (122 புள்ளி) 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2-வது இடத்தில் இருந்த இலங்கை அணி 4-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் சாம்பியன்ஷிப் தரவரிசையை 2001-ம் ஆண்டு மே மாதம் .சி.சி. அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு பெரும்பாலான ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவே நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்திருந்தது. தென்ஆப்பிரிக்காவும் அவ்வப்போது முதலிடத்தை தொட்டு பார்த்தது. அதன் பிறகு அந்த மகுடம் சூடிய 3-வது அணி இந்தியாவாகும். இந்த ஆண்டு இறுதி வரை இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும். இந்தியாவுக்கு அடுத்த ஆண்டுகள் அதிகமான டெஸ்ட் போட்டிகள் இல்லாததால் அடுத்த ஆண்டு தரவரிசையில் மாற்றம் ஏற்படலாம்.

.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசை வருமாறு:-

1.இந்தியா (124 புள்ளி)

2.தென்ஆப்பிரிக்கா (122 புள்ளி)

3.ஆஸ்திரேலியா (116 புள்ளி)

4.இலங்கை (115 புள்ளி)

5.இங்கிலாந்து (105 புள்ளி)

6.பாகிஸ்தான் (84 புள்ளி)

7.நியூசிலாந்து (80 புள்ளி).

8.வெஸ்ட் இண்டீஸ் (76 புள்ளி)

9.வங்காளதேசம் (13 புள்ளி).

இந்திய அணியின் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.

No comments: