Monday, November 30, 2009

லதா மங்கேஷ்கருக்கு பிரான்ஸ் விருது

ந்தித் திரையுலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரான்ஸ் அரசின் மிக உயரிய விருதான 'ஆபீசர் ஆப் தி லீஜன் ஆப் ஹானர்' வழங்கப்படுகிறது. மும்பையில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் ஜெரோம் பொன்னபோன்ட், 2-ந் தேதி நடத்தும் விழாவில் இவ்விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்படுகிறது.

பின்னணிப் பாடல் உலகில் 60 ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வரும் அவரின் ஒப்பற்ற சாதனையை அங்கீகரித்து இவ்விருது வழங்கப்படுவதாக ஜெரோம் பொன்னபோன்ட் தெரிவித்தார். ஏற்கனவே இவ்விருது, மறைந்த இயக்குனர் சத்யஜித்ரே, நடிகர் அமிதாப்பச்சன், ஆலிவுட் டைரக்டர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments: