Monday, November 30, 2009

'ஸ்டெம்செல்' முறையில் புற்றுநோய்க்கு தீர்வு


கொடிய வியாதிகளில் ஒன்று புற்றுநோய். எய்ட்சைப் போலவே இதன் பாதிப்புகளும் பயங்கரமாக இருக்கும். புற்று நோய்கள் உடலின் பல்வேறு பாகங்களையும் பாதிக்கக்கூடியது. வாய், நுரையீரல், குடல், ரத்தத்தட்டுகள், மூளை என முக்கியமான உறுப்புகளை பாதித்து முடக்குவதால் நோய்வாய்ப்படுபவர்களுக்கு மரண வேதனையாக இருக்கும்.

இவற்றில் ரத்தப் புற்றுநோய் சில வகைப்படும். அனீமியா, லூக் கேமியா, தலசீமியா போன்றவை குறிப்பிடத்தக்க ரத்தப்புற்று நோய்களாகும்.


மருத்துவ உலகில் ஸ்டெம்செல் முறை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பல்வேறு வியாதிகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் ரத்தப்புற்று நோய்களான அனீமியா, தலசீமியா போன்றவற்றுக்கும் முடிவு கட்டலாம் என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த ரிக்கன் இன்ஸ்டிடிïட் ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்து உள்ளது.


அனீமியா என்பது ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறைவால் ஏற்படுவதாகும். தலசீமியா என்பது ரத்தத்துக்கு போதுமான அளவு ஹீமோகுளோபின் கிடைக்காததால் ஏற்படுவதாகும். (ஹீமோகுளோபின் எனப்படுவது ரத்தத்துக்கு சிவப்பு நிறமளிக்கும் நிறமியாகும்.)


அடல்ட் (Adult) (அ) ப்ளுரி பொடன்ட் ஸ்டெம்செல் எலும்பு மஞ்ஞையில் (Bone Marrow) காணப்படும் ஸ்டெம் செல்களை நோயாளிகளின் எலும்பிலிருந்தும் அல்லது இரத்தத்திலிருந்தும் பிரித்து எடுத்தபின் அவை சுத்தப்படுத்தும் 'எண்டோடாக்சின் டெஸ்ட்' (Endotaxin Test) முறை மூலம் பாக்ட்ரியாக்கள் இல்லாமல் சுத்தப்படுத்தப்படும். குறைந்தது மூன்று மணிநேரம் 50 மி.லி. அளவு இரத்தம் சுத்தப்படுத்தத் தேவைப்படும். இருதய சம்பந்த நோய்களான அட்வான்ஸ்டு காரனரி ஆர்டரி, இருதய தசை தொய்வு, மாரடைப்பு இருதய வால்வு குறைபாடு போன்றவற்றைக் குணப்படுத்த ஊசி மூலம் நேரடியாக ஸ்டெம் செல்கள் செலுத்தப்படுகிறது. மேலும், மூளையில் அடிப்பட்டு சேதமடையும் பாகங்களைச் சரி செய்யவும், முதுகுத் தண்டு வட (Spinal Cord) அடிகளுக்கும் தண்டு வடத்தை சுற்றி ஸ்டெம் செல்கள் செலுத்தப்படுகின்றன.

ஸ்டெம் செல்கள் தன்னைத் திசுக்களாகவோ, தசைகளாகவோ மாற்றிக்கொள்ளும் தன்மையுடையதாய் உள்ளதால் இருதய தசை, நரம்பு மண்டலம், இரத்தம் கொண்டு செல்லும் தமனி போன்ற எல்லாப் பாகங்களிலும் நேரடியாகவே செலுத்தப்படுகிறது. திசுக்களாக மாறும் இவ்வகை ஸ்டெம்செல்கள் 'ப்ளுரி பொடன்சி' (Pleuri Potency) என அழைக்கப்படும். இரத்தப்புற்று நோய் (Leukaemia), இரத்தம் உருவாகுவதில் குறைபாடு உண்டு பண்ணும் நோய்களான அப்லாஸ்டிக் அனிமியா மற்றும் பரம்பரை நோயான தாலஸ்மியா (Thalassemia) போன்றவற்றை எலும்பின் மஞ்ஞையிலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம்செல்கள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

தொப்புள் கொடி ஸ்டெம்செல் (umfilical cord stemcell) தொப்புள் கொடியில் நிறைந்து காணப்படும் ஸ்டெம்செல் (Mallignant) மேல்க்னன்ட் அல்லாத நோயுள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறையாளர்களுக்கும், பரம்பரை நோயுள்ளவர்களுக்கும் ஸ்டெம்செல் மிகவும் உபயோகப்படும். இன்று தொப்புள் கொடி ஸ்டெம்செல் மூலம் 45 வகையான நோய்களைத் தீர்க்கும் வகையில் பயன்பட்டு வருகிறது. அல்சமீர், சர்க்கரை வியாதி போன்ற வியாதிகளை ஸ்டெம்செல் மூலம் பூரணமாகக் குணமாக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த ஸ்டெம்செல்கள் மிகக்குறைந்த வெப்பநிலையில் பத்திரமாக பாதுகாக்கப்படும். வருங்காலத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் இதை பயன்படுத்தி சிகிச்சை செய்யலாம்.

எல்லாமே புதிதாக வரும்போது எக்கச்சக்க செலவாகும் என்பது அறிந்தது. செல்பேசி சேவை முதல் கணினி வரை அறிமுகமாகும்போது அப்படியோவ் என்று வாயை பிளக்கும் அளவிற்கு விற்பனையாவதும், வாங்குபவர்களின் எண்ணிக்கையும், விற்பனைப் போட்டியும் அதன் விலைகளில் சரிவை ஏற்படுத்துவதும் நாம் அறிந்ததே.


அதேப்போலத்தான் இந்த தொழில்நுட்ப முறையும் தற்போது வாயைப் பிளக்க வைக்கிறது. பணக்காரர்களால் மட்டுமே முடியும் என்ற எண்ணத்தை உண்டுபண்ணுகிறது. அதாவது, ஸ்டெம்செல்லை பிரித்தெடுக்க ஆரம்பத்தில் சுமாராக 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். பின் அதை பாதுகாக்க ஆண்டுணுக்கு 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். பின்னாளில் இந்த ஸ்டெம்செல்களைக் கொண்டு சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அதற்கு தனியாக ஒரு பெரிய தொகை செலவாகும்.


ஆனால் இதே நிலை வெகு நாட்களுக்கு நீடிக்காது. இந்த சிகிச்சை முறையும், பாதுகாப்பு வசதியும் அதிகரிக்கும்போது இந்த செலவுகள் குறையும். இதனை நடுத்தர மக்களும், ஏழைகளும் பயன்படும் வகையில் அமையும் என்று நம்பலாம்.

1 comment:

ரோஸ்விக் said...

இதுவரை தீர்க்கப்படாத நோய்களான புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவற்றிற்கு இது தீர்வாகும் என்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆய்வு தொடரப்பட்டு அனைவருக்கும் இது பயன்படட்டும்.

பகிர்விற்கு நன்றி நண்பரே!