Saturday, July 4, 2009

அனர்த்தங்கள்






















னது நண்பன்
ஒரு விழாவிற்கு
என்னை அழைத்திருந்தான்

'புத்தக வெளியீடும்
குறுவட்டு வெளியீடும்'

வீடியோ காட்சிகளோடு
இனிதே தொடங்கியது
நிகழ்ச்சிகள்

நானும் எனது மனைவியும்
நண்பர்கள் சிலரும்
கலந்து கொண்டோம்

புலம் பெயர் ஈழத் தமிழச்சியின்
கவிதை நூல்கள் அவை ...

வாழ்த்துரை தொடங்கியது

புலம் பெயர் தமிழரின் தமிழ்ப்பற்று
ஈழத்தின் சங்கடங்கள்...
யுத்தத்தின் மத்தியிலும்,
அவர்தம் இலக்கியநாட்டம்...
தனித்திறமைகள்...
இப்படிப்போயின வாழ்த்துரைகள்

இடையிடையே
வாழ்த்துரைப்பவரின்
வித்துவத்தனங்களும்
தோன்றி மறைந்தன

எல்லாம் சரி....!
வாழ்த்துபவர்கள் வாழ்த்தட்டும்
அதற்காக...
தமிழகத்தை
வருத்த வேண்டியதில்லை

ஈழத்தமிழனை
உயர்த்துவதாக எண்ணி
சங்கடத்தில் அவனை
நெளியவைக்கும்
வாழ்த்துரைகள்
வாழாதிருக்கட்டும்

கொஞ்ச நாளாய்
ஈழத்தமிழன் மீது
எல்லோருக்கும்
ஏன் இந்த மயக்கம் ?

தவறான மயக்கத்தால்
தமிழினம் தெறித்துப் போனது
பாடமாகட்டும்

தமிழகமின்றி ஈழமில்லை
இதில் எமக்கு பேதமில்லை

இவர் முதுகை அவர் சொறிவதும்
அவர் முதுகை இவர் சொறிவதும்
இதனால் விளையும் இரத்த முடையும்
இனிமேலாவது நின்று போகட்டும்

தமிழகம் தறிகெட்டு விட்டது
என்றால்,
பிறகு என்ன ம.......க்கு
தமிழகத்தில்
புத்தக வெளியீடு ?
என்று கேட்டுவிடும்
துர்பாக்கியம் நிகழ்ந்துவிடும்

குறிப்பு : அண்மையில் தமிழகத்தில் பிரபல ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற ஈழப் பெண் கவிஞரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் அவரை வாழ்த்துவதாக எண்ணி தமிழக அறிஞர்கள் நடத்திய அனர்த்தத்தின் விளைவால் எழுந்த குமுறல் இது.

-குழந்தைக் கவிஞன்-

No comments: