Wednesday, July 15, 2009

இன்று 'கல்வி வளர்ச்சி நாள்' - படிக்காத மேதை பிறந்தநாள்

ன்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 107-வது பிறந்த நாள்.

'பெருந்தலைவர்' என்றும், 'கர்ம வீரர்' என்றும், 'கிங் மேக்கர்' என்றும் அன்புடன் அழைக்கப்படுபவர் காமராஜர். விருதுநகரில், 15-7-1903-ம் ஆண்டு பிறந்த காமராஜருக்கு இளமைப்பருவத்திலேயே நாட்டுப்பற்றும் அவருடன் சேர்ந்துகொண்டது. 1915-ம் ஆண்டிலேயே விடுதலைப்போராட்டத்தில் குதித்தார்.

தனது 12-வது வயதிலேயே அரசியல் ஆர்வம் அவரை பற்றிக்கொண்டது. ஆரம்பகாலம் தொட்டு எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். தீரர் சத்தியமூர்த்தி சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கட்சியின் செயலாளராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார். அரசியலில் படிப்படியாக உயர்ந்து தமிழக முதல்-அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்று பல்வேறு பதவிகளை வகித்தார். காமராஜருடைய ஆட்சிகாலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எனவே 'கல்விக்கண் திறந்தவர்' என்று அனைவராலும் பாராட்டப்பட்டார்.

அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படும் காமராஜரின் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் ஆக கொண்டாடப்படும் என்று, கடந்த 2006-ம் ஆண்டு என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, காமராஜரின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

படிக்காத மேதை கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளினை நாமும் சேர்ந்து கொண்டாடுவோம்.

No comments: