Thursday, July 9, 2009

ரொம்ப நாளாவே...

ரொம்ப நாளாவே
என் மனசு
வித்தியாசமாக
ஏதோவெல்லாம்
நினைச்சுக்குது...

பெத்தவங்களைப் பத்தி ...
பிள்ளைங்களைப் பத்தி ...
மனைவியைப்பத்தி ...
காதலிகளைப் பத்தி...
நண்பர்களைப்பத்தி...
சமூகம் பத்தி ...
நாட்டைப்பத்தி ...
கடவுள்பத்தி...
மரணம்பத்தி...
தொழிலைப்பத்தி...
எதிர்காலம்பத்தி...

இப்படியே
பட்டியல் நீளுகிறது.

ஒவ்வொரு நினைப்பிலும்
வேறு வேறு நினைவுகள்...

பெரும்பாலும்
எதிலும் பிடிப்பில்லாத நிலையும்
வெறுமையுமாய்த்
தொடர்கிறது...

எனினும்-
சீ. . .
இதென்ன வாழ்க்கை
என்று உதறிவிட மட்டும்
மனசு வரலே...

குழந்தைக்கவிஞன்

No comments: