Friday, July 10, 2009

வேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்

ரண்டு மனிதர்களுக்கு இடையே உறவுகள் நிலவ மொழி ஒரு கருவியாக உள்ளது. ஒரு மனிதனின் உணர்வையும் அவனின் திறனையும் எடுத்துக்கூறும் சாதனமாகவும் மொழி மாற்றமடைகிறது.

இவ்வாறு மனிதனுக்கு பயன்படும் மொழிகள் பலவுண்டு, இந்த மொழிகளின் பட்டியல் நீளமானது.மொழிகள் மனிதர்க்கு மட்டுமல்ல, சமூகங்களுக்கு இடையிலும், நாடுகளுக்கு இடையிலும் நட்புப் பாலத்தை உருவாக்கும் திறன் பெற்றவை.

அத்துடன் அதனை சிறப்பாக கையாளும் மனிதர்களுக்கு வாழ்க்கையையும் அமைத்து தருகின்றன. அந்த வகையில் ஒரு தாய்மொழியில் பயின்றவர். வேறொரு நாட்டின்மொழியைப் படித்து அதில் தேர்ச்சி பெற்றவரானால் குறிப்பிட்ட மொழி வழங்கும் நாட்டில் மதிப்புடன், வேலைவாய்ப்பையும் பெறுகிறார். இன்று இதற்கான வாய்ப்பு பல்கிப்பெருகியுள்ளது. இதனை இந்த நூல் தெளிவாக விளக்குவதுடன் இந்தியாவில் வெவ்வேறு நாடுகளின் மொழிகளை எங்கெல்லாம் கற்பிக்கின்றனர் என்பதைத் தெளிவாகவும், வழிக்காட்டியாகவும் இருந்து விளக்குகிறது. இதன் ஆசிரியர்களான ஏ.எஸ்.ரகுவும் கே.பார்த்திபனும் இந்நூலை படைத்துள்ளனர்.

112 பக்கமுள்ள இந்நூலின் விலை ரூ. 50 (சென்னை, இந்தியா)
நூல் வேண்டுவோர் 9841943780 என்ற என்னில் தொடர்பு கொண்டு முகவரி கூறினால் அஞ்சலில் அனுப்புகின்றனர்.

No comments: