Saturday, July 4, 2009

ரதன் கவிதைகள்






















லகின்
மிக அழகான விலங்குகள்
தேவாங்குகள் என்று தோன்றுகிறது

அவற்றின் சின்ன உருவம்
மனதுக்கு இதமாக இருக்கிறது

மருளுகிற உருண்ட கண்கள்
கருணையை யாசகம் கேட்கின்றன

அதன் மென்மயிர் அடர்ந்த சருமங்கள்
இதமாக வருடிக் கொடுக்கப்பட வேண்டியவை

அவை குரங்குக் கூட்டத்தின்
நெருங்கிய சொந்தங்களாய் இருக்கலாம்

எனக்கு உண்மையில் பிடித்தவை
குரங்குகள் தான்

இருப்பினும் -
தேவாங்குகள் முதலிடம் பிடித்த காரணம்
அப்பிராணிகளின் அப்பிராணித் தோற்றம் தான்

என்ன செய்வது ?
தோற்றத்தை வைத்தும்
எடைபோட வேண்டியிருக்கிறதே

ஆனால்,
அவை மனிதர்கள் அல்ல என்பதால்
தேவாங்குகள் விசயத்தில்
என் கணிப்பு தவறாய் இருக்கப்போவதில்லை

எனக்குத் தெரிந்த நிறையப்பேர்
தேவாங்குகளின் மீது
பரிவுதான் காட்டுகிறார்கள்

பேசாமல்
தேவாங்காய் பிறந்து தொலைத்திருக்கலாம்
இப்போதெல்லாம் சுய பச்சாதாபம்
என்னைப் பிடித்து ஆட்டுகிறது

கருணைக்கு யாசிக்கிறேன் !
தேவாங்குகளின் மருளுகிற விழிகளுடன்

No comments: