Thursday, July 2, 2009

குழந்தைக் கவிஞன் கவிதைகள்
























சொல்லத்தெரிவதில்லை


னக்குத் தெரிந்ததை
எல்லோர்க்கும் சொல்ல
எண்ணிய போதுதான்
தெரிந்தது....
எல்லோர்க்கும் தெரிந்த சில,
எனக்கும்
எனக்குத் தெரிந்த சில,
எல்லோர்க்கும்
பொதுவாகி இருப்பது.

இவற்றையும் தாண்டி
சிலருக்கு அதிகமாயும்
வேறு சிலருக்கு குறைவாயும்
தெரிதலும், புரிதலும்
கூடக் குறைய எனும்
பேதமின்றி
மாறி மாறி
இருந்து கொண்டுதான்.....
இருக்கிறது.

இங்கே!
அறிவாளி என்றும்
அறிவிலி என்றும்
எவருமிலர் என்றே
தோன்றுகிறது
அவரவர் அளவில்
அவரது மனதில்
அறிதல், தெரிதல்
புரிதல் என ஏதோ சில
இருந்து கொண்டுதான்....
இருக்கிறது.

நான் தெரிவிப்பதற்கு
புதிதாக எதுவுமில்லை
அவர்கள் அறிவதற்கும்
ஏதுவாக எதுவுமில்லை
அதனால்
அவரவர், அவரது வழியே
வாழ்ந்து விட்டு
போகட்டுமென விட்டுவிட்டேன்
எதையும் எவர்க்கும் சொல்லாமல்.

*************************************

மார்க்கம்

நான் மாறித்தான் ஆகவேண்டும்
நீயும் மற்றும் எல்லோரும்....
மாறித்தான் ஆகவேண்டும்
வாழ்தலின் போக்கில்
விழிப்புடன் இருந்தால்
நான் என்ன ? நீயும்
மற்றும் யாவரும்
உரத்துச் சொல்லலாம்
"எல்லோரும் மாறித்தான் ஆகவேண்டும்"

'மாறுதல் ஒன்றே மாறாதது'
என்பது வாழ்வியல் விதி
உனக்குள் இருக்கும்
இறுக்கம் உடைத்து
இதயம் திற !
இமயம் உனக்கு அருகாகும்
விழிகளை மூடி
மனதினை திற
வாயினை மூடி
செவிகளை திற
சற்று மௌனித்திரு
உலகம் உனக்குள் சுழலும்
சுழலும் உலகம்
சூட்சுமம் காட்டும்
அதனுள்
உனக்கொரு மார்க்கம் தெரியும்
அதுவே 'மாறுதல்' என்றும் புரியும்.

No comments: