Saturday, June 20, 2009

தோழர் எம்.கே. !






















கல்யாணசுந்தரம்
!

அந்தக் கிழட்டுச் சிங்கம்தான்
தமிழ்நாட்டு அரசியலைப்
புரட்டிப் போட்டது.

எம்ஜிஆர் எனும் மக்கள்தலைவனை
உருவாக்கிய நிகழ்ச்சி
ஒரு தமிழ்நாட்டுப் புரட்சி !.

அவர்
நேர்மைத் தராசில்
சொந்தக் கட்சியைக் கூட
நிறுக்கத் தவறியதில்லை.

அவரது
நேர்மையெனும் நெற்றிக்கண்ணில்
பொசுங்கிய தீமைகள் ஏராளம் !

தொழிலாளர் உரிமை...
மக்கள் போராட்டம்...
இவையே அவரது
பொழுதுகளாய்ப் படர்ந்தன.

இடியப்பச் சிக்கலாயிருந்த
ஈழச் சிக்கலை
அரசியல் அனுபவத்தால்
அவிழ்க்கச் சொன்னவர்.

பத்மநாபா எனும்
பொதுமைப் போராளிக்கு
பாசறைப் பயிற்சியில்
பாதையைப் புகன்றவர்.

கண்ணீர்த் தீவாகட்டும்...
கச்ச தீவாகட்டும்...
சர்வதேசியத்தின் எந்தப் பக்கமாயினும் -
அவர் அணுகுகிற பார்வை
தீர்க்க தரிசனத்தின்
தெளிவான வெளிப்பாடு !.

இந்திய ஐக்கிய
கம்யூனிஸ்ட் கட்சி எனும்
புதிய சிந்தனை வடிவத்தின்
ஆதார சுருதி !.

'வலிமையான இந்தியாவில்
வளமான தமிழகம்'
கல்யாணசுந்தரத்தின்
கனவான வசனம்.

கனவுகள் மெய்ப்படும்
வானமும் வசப்படும்
காவியத் தலைவனின்
எண்ணங்கள் பலித்திடும் !

- வாலிபக் கவி -


(ஜூன் 20 - தோழர் எம்.கல்யாணசுந்தரத்தின் நினைவுநாள்)

No comments: