Friday, May 1, 2009

மருத்துவமும் - மகத்துவமும்

மனித உடல் உறுப்புக் கடிகாரம்

மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். இது இயற்கை. ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது இயற்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே நோய். ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டு மென்றால் அவனுடைய உடல் மொழியைக் கேட்கக் கற்றுக் கொள்ளவேண்டும். கீழ்க்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களைப் பின்பற்றக் கூறுகின்றன.

அதிகாலை 3 – 5 மணி - நுரையீரல் - இந்த நேரத்தில் தூக்கத்தால் எழும்ப வேண்டும். யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றை வெட்ட வெளியிற் செய்யலாம் காரணம் விடியற் காலை மணி வரை அமுதக் காற்று ஒன்று வீசுகின்றது. (ஓசோன்) ஆஸ்துமா நோயாளிகள் மட்டும் தவிர்க்கலாம்.

காலை 5 – 7 மணி - பெருங்குடல் - இந்த நேரத்தில் கண்டிப்பாகத் தூக்கத்தால் எழும்பவேண்டும். இந்த நேரத்தில் எழும்புபவர்களுக்குக் கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அதனால் நரம்புத் தளர்ச்சி ஏற்படாது.

காலை 7 – 9 மணி - வயிறு - கண்டிப்பாக இந்த நேரத்தில் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.

காலை 9 – 11 மணி - மண்ணீரல் - சிற்றுண்டியோ, பாணங்களோ, தண்ணீரோ எதுவும்இந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது. அப்படி எதுவும் சாப்பிட்டால் மண்ணீரல் பாதிப்பு ஏற்படும் உடலில் வெப்பம் அதிகரிக்கும். சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப் பிற்கும், புத்துணர்ச்சிக்கும் பதிலாக அசதியும், தூக்கமும் வரும். நாளடைவில் பசி குறையும். (நீரிழிவு நோயளிகளுக்கு படபடப்பு, மயக்கம், தூக்கக் கலக்கம் ஏற்படும்.)

நண்பகல் 11 – 1 மணி - இருதயம் - கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடிக்கலாம், மருத்துவ மனைகள் எல்லாம் விழிப்புடன் இருக்கும் நேரமிது. காரணம் இந்த நேரத்திற்தான் இருதய நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் தூங்காமல் இருக்க வேண்டும். தூங்கினால் அபான வாயு பிராண வாயுவுடன் கலந்து மாரடைப்பு, முகவாதம், பக்கவாதம் அல்லது மூட்டுவாதம் மற்றும் உடல் வலிகளை நிச்சயம் ஏற்படுத்தும்.

பகல் 1 – 3 மணி - குடல் - மதிய உணவை முடித்து 3 – 5நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

மாலை 3 – 5 மணி - சிறுநீர்ப்பை - பானங்களோ, தண்ணீரோ குடிக்க உகந்த நேரம். முதுகு, இடுப்பு வலிகள் வரும் நேரம்.

மாலை 5 – 7 மணி-சிறுநீரகம் வழக்கமான வேலையில் இருந்து விடு பட்டு இரவுக்கு முன்பாகவே வீடு வந்து சேரவேண்டும். ரீனல்பெயிலியர் முதல் நீர்க்கடுப்பு வரை ஏற்படும்.

இரவு 7 – 9 மணி - இருதய மேலுறை - இந்த நேரத்திற்குள் கண்டிப்பாக இரவு உணவை முடித்திருக்க வேண்டும். மர்பு வலி, பாரம், படபடப்புத் தோன்றும்.

இரவு 9 – 11 மணி -மூன்று வெப்பமூட்டி - மனித உறுப்புகளுக்கு ஓய்வு தரவேண்டிய நேரம்.இந்த நேரத்திற்குப் பின்பு கண் விழித்திருப்பதோ படிப்பதோ கூடாது.

நடுநிசி 11 – 1 மணி-பித்தப்பை - இந்த நேரம் கண்டிப்பாக தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். விழித்திருந்தால் அடுத்த நாள் உங்கள் முழு சக்தியையும் இழக்க நேரிடும்.

அதிகாலை 1 – 3 மணி-கல்லீரல் - இந்த நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும். விழித்திருந்தால் கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும். உறக்கம் பாதிக்கும். உடலில் அரிப்பு, நமைச்சல் அதிகரிக்கும்.

.கேசவராஜ்

No comments: