Saturday, May 9, 2009

செழியன் கவிதைகள்

யாரோடு நோவேன்? யார்க்கெடுத்துரைப்பேன்?!

வீட்டுக்குமேல் போர் விமானங்கள் பறக்க
குழந்தைகளை இழுத்துக் கொண்டு நீங்கள்
ஓடி ஒளியும் போது...
கண்ணெதிரில் உங்கள் வீட்டு பெண்கள்
கற்பழிக்கப்படும் போது...
உங்கள் சகோதரன்
சுட்டுக் கொல்லப்படும் போது...
உங்கள் பெற்றோர்
பட்டினியால் இறக்கும் போது...
அப்போது தான்
போர் என்பது புரியுமெனில்
அதுவரைக்கும் தமிழர்களே
கிரிக்கெட் பாருங்கள்.
அடுத்த தேர்தலும் வந்து விட்டது
வரிசையில் நின்று வாக்களியுங்கள்.



பயணத்தில் உங்கள் இருக்கையில்
இன்னொருவர் அமர்ந்துக் கொண்டு
எழ மறுத்தால்
என்ன செய்வீர்கள்?
சாலையில் உங்கள் வாகனத்தை
இன்னொரு வாகனம் இடித்து விட்டால்
என்ன செய்வீர்கள்?
உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர்
காயம் வர அடித்தால்
என்ன செய்வீர்கள்?
பேருந்தில் உங்கள் மகளை
யாரோ ஒருவன் உரசுவதைப் பார்த்தால்
என்ன செய்வீர்கள்?
உங்கள் வீட்டுக்குள் அத்துமீறி
சில அந்நியர் புகுந்தால்
என்ன செய்வீர்கள் ?
இறையாண்மை பேசுவீர்களோ?
இதற்கெல்லாம்...
எதிர்த்தலே தீவிரவாதம் எனில்
இலங்கையில் நடப்பதும் அஃதே நண்பா!



ஆர்பாட்டம் நடத்தியாச்சு
ஒப்பாரி வெச்சாச்சு
கண்டனக் கூட்டம் முடிஞ்சாச்சு
கவிதை வாசிச்சாச்சு
கட்டுரைகள் எழுதியாச்சு
ஓவியம் வரைஞ்சாச்சு
ஊர்வலம் போயாச்சு
மனிதச் சங்கிலி
அடையாள உண்ணாவிரதம்
வழக்கறிஞர் போராட்டம்
மாணவர் போராட்டம்
திரையுலகப் போராட்டம்
கடையடைப்பு
தந்தியடித்து
மெயில் அனுப்பி
எஸ்.எம்.எஸ். விட்டு
வேலை நிறுத்தம் செஞ்சு
பேருந்துகள் கொளுத்தி
தூதரகங்களை நொறுக்கி
ஜெயிலுக்குப் போயி
சாகும் வரை உண்ணாவிரதமும் இருந்து
அட! பதினேழு பேர் தீகுளிச்சுச்
செத்தும் போயாச்சு
.....க்காளி... என்னதான்யா செய்யறது இனி?!

2 comments:

Kavi kilavan said...

யாரோடு நோவேன்? யார்க்கெடுத்துரைப்பேன்?

sakthi said...

அதுவரைக்கும் தமிழர்களே
கிரிக்கெட் பாருங்கள்.
அடுத்த தேர்தலும் வந்து விட்டது
வரிசையில் நின்று வாக்களியுங்கள்.


kannathula adicha mathiri erunthuchu

aana namma makkal thirunthamatanga