Monday, May 18, 2009

நம் அனைவருக்கும் இந்தியா உதாரணமாக இருக்கிறது - ஒபாமா பாராட்டு


இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்ததற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், `உலகிலேயே அதிக அளவிலான மக்கள் வாக்களிக்கும் ஒரு பெரிய தேர்தல் நடைமுறை வெற்றிகரமாக முடிந்து இந்தியாவின் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நம் அனைவருக்கும் இந்தியா உதாரணமாக இருக்கிறது. இந்திய தேர்தல் முடிவுகள் அடிப்படையில் அமையும் புதிய அரசை உலகமே எதிர்பார்த்திருக்கிறது. இந்திய மக்களின் முடிவுகளை அமெரிக்கா அங்கீகரிக்கிறது. புதிய அரசுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் ஒபாமா ஆர்வமாக இருக்கிறார்' என்று கூறப்பட்டுள்ளது.

No comments: