Saturday, May 2, 2009

இறையன்பு கவிதைகள்

தேர்தலும் காதலும்

இளைஞர்கள்
நடத்தும் அழகுத்தேர்தல்
அனைவரின் வாக்கும் உனக்கே!

கலைஞர்கள் நடத்தும் கவிதைப்போட்டி
அத்தனைக் கேடயமும் உனக்கே!

கவிதை கொண்டு வந்தார்கள்
கண்கள் கொண்டு வந்தாய்!

குழல்கள் கொண்டு வந்தார்கள்
குரலைக் கொண்டு வென்றாய்!

மலர்கள் இடையே போட்டி
உன் சின்னம் ஆவேன் என்று!

மயில்கள் இடையே போட்டி
உன் கன்னம் ஆவேன் என்று!

எதிர்த்தவர் முதலீடு
பறிமுதல் ஆகாதே!

முடிவுகள் முன்கூட்டி
தெரிந்தே போகாதோ!

அலை அலையான கூந்தல் கண்டு
அலைகள் உந்தன் பக்கம்

மளமளவென்று வாக்குகள் வந்து
பெட்டிகள் உடனே ரொம்பும்

வாக்குச் சாவடி வருவாயா?
வாக்குறுதி தருவாயா?

அழிய மையால் அடையாளங்கள்
இதயம் முழுவதும் இடுவாயா?

மலர்கள் மசக்கை கொள்ளும்
மலைப்பொழுதில்- உந்தன்
மனதைக் கொஞ்சம் தருவாயா?

கள்ள வாக்குகள் இல்லா தேர்தல் இதுவன்றோ!
கள்ளப்பார்வை ஒன்றே தேர்தல் நிதியன்றோ!

வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்.


3 comments:

sakthi said...

கலைஞர்கள் நடத்தும் கவிதைப்போட்டி
அத்தனைக் கேடயமும் உனக்கே!

கவிதை கொண்டு வந்தார்கள்
கண்கள் கொண்டு வந்தாய்!

nalla pakirvu nanba

கவிக்கிழவன் said...

Goog Supper

Tamil Home Recipes said...

மிகவும் அருமை