Monday, May 18, 2009

ஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப்புலிகள் தயார் - ஒபாமாவுக்கு வைகோ அவசர கடிதம்


சூரிய namaskaaram நமஸ்காரம் விடுதலைப்புலிகள் தயார் என்றும், இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வைகோ அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் ஹிலாரி கிளிண்டன், இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுன், இங்கிலாந்து வெளியுறவுச்செயலாளர் டேவிட் மிலிபேண்ட், ஐ.நா பொதுசெயலாளர் பான் கி மூன் ஆகியோருக்கு ஈ-மெயிலில் அனுப்பி உள்ள அவசர கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் முல்லைத்தீவில் ஒரு மனித பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைகளால், தமிழர்கள் ஆயுதப்போராட்டத்திற்கு தள்ளப்பட்டார்கள். அந்த போராட்டத்தை விடுதலைப்புலிகள் முன்னெடுத்து நடத்தினார்கள்.

தற்போது விடுதலைப்புலிகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசு அதிகாரிகளிடம் ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக உள்ளனர். அதே வேளையில் போராளிகள் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அவர்கள் ஒரு போதும் இலங்கை ராணுவத்தினரிடம் சரண் அடைய மாட்டார்கள். அதைவிட உயிரை மாய்த்துக்கொள்வார்கள். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆயிரக்கணக்கான போராளிகள் சயனைடு குப்பிகளை கடித்து தற்கொலை செய்து கொள்வார்கள். நினைத்துப்பார்க்க முடியாத அத்தகைய கொடூரம் நிகழுமானால் உலகம் முழுமையும் வாழ்கின்ற பத்துக்கோடி தமிழர்களின் இதயங்கள் துயரத்தால் நொறுங்கிப்போகும்.

எனவே தாங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஈழத்தமிழர்களை காப்பாற்றுமாறு கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.

கண் கெட்ட பின்னே சூரிய உதயம் எந்தப் பக்கம் ஆனா எனக்கென்ன போடீ...

No comments: