Saturday, May 16, 2009

இந்தியத் தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?


மத்தியில் மீண்டும் காங்கிரஸ் தனது கொடியை நாட்ட இருக்கிறது. எந்தவித மாய்ச்சலும் இன்றி இதர சிறிய குழுக்களின் ஆதரவோடு நெஞ்சை நிமிர்த்தியபடி மீண்டும் மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.

தமிழ் நாட்டினைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை, பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக விடுதலைப்புலிகளை ஆதரித்த, பாட்டாளி மக்கள் கட்சி எந்தவொரு இடத்தையும் பிடிக்காததும், வை.கோ. தோல்வியை கண்டதும் இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது இந்தத் தேர்தலில் அதிக செல்வாக்கினை செலுத்தவில்லை என்பது தெரிகிறது.

இருந்த பொழுதிலும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ் நாட்டில் ஒரு அடி, பலமாக விழுந்துதான் இருக்கிறது. முக்கியமான தலைவர்கள் தோல்வியைத் தழுவி உள்ளமை இதற்குச் சான்றாகிறது. ஆனால் தி.மு.விற்கு கிடைத்த வெற்றியானது, அவர்களது கடந்தகால தேர்தல் வாக்குறுதிகள் கணிசமான அளவு நிறைவேற்றப்பட்டிருந்தமையும், கலைஞரின் அணுகுமுறை தமிழகத் தமிழருக்கும், ஈழத் தமிழருக்கும் சேர்ந்த ஒரு பாதுகாப்பான விடயமாக தமிழக மக்கள் கருதியிருப்பதாகத் தெரிகிறது.

அதிமுக விற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிக் கிடைக்காவிட்டாலும் முன்னேற்றமான ஒரு சூழல் உருவாகியுள்ளமையும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும் எதிர்பார்ப்பு நிறைவேறாமைக்கு சில காரணிகளை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

  • திமுக ஆட்சி மீது மக்களுக்கு பெரிய அளவு வெறுப்பு எதுவும் இருக்கவில்லை.

  • ஜெயலலிதாவின் கடைசி நேர ஈழத் தமிழர் மீதான அக்கறையும் ஈழ விடுதலைப்பிரகடன உரையும் தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கவில்லை (வெளி நாடு வாழ் ஈழத் தமிழர்கள் மட்டும் நம்பியிருக்க கூடும்).

  • தனது அரசியல் கூட்டணித் தலைவர்கள், குறிப்பாக வைகோ, தா.பாண்டியன் போன்றோர் ஈழத் தமிழர் பிரச்சினைப் பற்றி எடுத்துக் கூறிய காலக் கட்டத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளாத ஜெயலலிதா, குருஜி ரவி சங்கரின் ஆரூடத்திற்கு பணிந்தமையும் தமிழக மக்களுக்கு புரிந்திருக்கலாம்.

  • ஜெயலலிதா கலைஞர் மீது தொடுத்த அசிங்கமான பிரச்சார அம்புகள் ஒரு முதிய அரசியல் அறிஞர் என்றும் பாராமல், கலைஞரது நோயை கொச்சைப்படுத்தி பிரயோகித்த வார்த்தைகள் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்ககூடும்.

  • திமுக அரசின் செயல் திட்டங்கள் மீதான விமர்சனகளை விட, தனிப்பட்ட நபர்களின் மீதான விமர்சனங்களே ஜெயலலிதாவின் தேர்தல் உரையில் அதிகம் இடம்பெற்றமையும் ஒரு காரணமாகலாம்.

இருந்த பொழுதிலும் தமிழகத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும், திமுக விற்கும் ஒன்றை உணர்த்த தவறவில்லை என்றே தெரிகிறது. அதாவது இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது தமிழக மக்களில் இருந்து பிரிக்க முடியாத ஒன்று என்பதை, ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளில் களம் இறங்கிச் சொல்லப்படாத காங்கிரஸ் கட்சிக்கு அதிக தோல்வியைக் கொடுத்து, கலைஞருக்கும், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் வெற்றியை கொடுத்திருப்பதன் ஊடாக இதை உணர்த்தியிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் பிரச்சினையை முன்னிறுத்தி, ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைப் பார்த்த நிலை ஒன்றும், ஈழத் தமிழர்களின் பிரச்சினையை தனியாகப் பார்த்த நிலையொன்றும் தமிழகத்தில் இருந்திருக்கிறதென்பது மறுக்க முடியாதது.

ராஜிவ் காந்தியின் மரணமென்பது, தமிழக மக்களால் இன்னும் மறக்கப்படவில்லை என்பதும், அதைக் காரணமாக வைத்து ராஜிவ் காந்தி ஏதோ தங்களுக்கு மட்டும் உரித்தான ஒருவர் போலவும், அதனால் ஈழத் தமிழர்களின் நலன் பற்றி தங்களுக்கு ஒன்றும் பெரிய அக்கறையில்லை என்பது போலவும் நடந்துக் கொண்ட காங்கிரசாருக்கு இந்தத் தோல்வி மக்கள் கொடுத்த அடியாகும். ராஜிவ் மரணம் இந்தியா முழுக்க ஒரே பார்வையோடு கூடியது, அதற்கு ஒரு பொது நீதியும் உண்டு. ஆனால் அதே நேரம் தமிழக காங்கிரசாருக்கு, ஒருபடி மேலே தமிழகத் தமிழனின் உணர்வோடு கூடிய ஈழத் தமிழன் பற்றிய உணர்வும் வழமைபோல் இருந்திருக்க வேண்டும்.

அந்த வகையில் கலைஞரும் திருமாவளவனும் தமிழக மக்களின் உணர்வுகளோடு இணைந்தும், அதே நேரம் இந்திய தேசியத்தோடு இணைந்தும், இந்த தேர்தலைச் சந்திததென்பது தான் அவர்களுக்கு வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள உதவி இருக்கிறது எனலாம். கலைஞரின் முதிர்ந்த அரசியல் ஞானம் என்பது இதுதானோ என எண்ணத் தோன்றுகிறது.

இனி வரும் காலங்களில் கலைஞரும், திருமாவளவனும் தமது மண்ணுக்குரிய அரசியலை கவனிக்கும் அதே நேரம், அவர்களது ஆட்சி அதிகார காலகட்டத்திற்குள் ஈழத் தமிழர்களுக்கான நீதியான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்க, முழுப் பொறுப்பையும் எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.

அப்படி
ஒரு விடயம் நடந்து முடிந்தால், வரப் போகும் சட்டசபைத் தேர்தலும், ஆட்சி அதிகாரமும் கலைஞருக்கு 'தானாகக் கனிந்து மடிமேல் விழுந்த கனிபோல் அமையும். அது தீஞ்சுவை தருவதாகவும் தமிழ்க் கிழவி அதியமானுக்கு கொடுத்த நெல்லிகனியாகவும் அமையுமென்பது கலைஞருக்குரிய வாய்ப்பாகும்.


கலைஞரின்
அரசியல் அனுபவத்திற்கு யாரும் ஆயுள் குறிக்க முடியாதென்பதை இந்தத் தேர்தல் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

7 comments:

S Senthilvelan said...

//கலைஞரின் அரசியல் அனுபவத்திற்கு யாரும் ஆயுள் குறிக்க முடியாதென்பதை இந்தத் தேர்தல் மீண்டும் நிரூபித்திருக்கிறது.//

நல்லா எழுதியிருக்கீங்க சார்...

உங்கள் விருப்பம் தான் நம் மக்களின் விருப்பமும்...

இதோ எனது அலசலையும் படித்து பாருங்கள்

உளறுவாயன் said...

Thank you very much...

வண்ணத்துபூச்சியார் said...

நல்ல பதிவு. நன்றி.

மே 16 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 27 ம் தேதி சொன்னது..தேர்தல் கிளைமாக்ஸ் பதிவின் சுட்டி:

http://mynandavanam.blogspot.com/2009/05/blog-post_16.html

பதிவை பார்க்கவும்...

தங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்.

Anonymous said...

பயங்கரமாக காமெடி பண்றீங்க ........அவருடைய உடலைபோல் நம்முடைய தமிழகமும் இருக்கிறது

அவன்யன் said...

Dear Friend,
Never say about Kalainagar, he is a traitor for tamils. you stated several reasons for DMKs win. But I will say only two.

1. ALL our dear tamil people were lost their conscience
or
2. DMK should have used it's power to grab this win

KATHIR = RAY said...

Money + election commission +sonia+kalaingar kootu vetri. kevelamana election intha india la nadathu mudinjurukku. internet virus hackers mathiri. electronic vote machine thilu mullu main reason. truth will come soon. u see today share market raised 2000 points how it possible all are made by Chidambaram action.

உளறுவாயன் said...

நன்றி

தொடர்ந்து எமக்கு ஊக்கமும்,
ஆதரவும் தருவீர்கள் என நம்புகிறோம்.