Sunday, May 10, 2009

மனசு


தொலைந்ததா இல்லை தொலைத்தோமா?
மலைத்துப் போன மனம்
மரத்துப்போய் அடிக்கடி கேட்கிறது
இப்படியொரு கேள்வியை.
எதை தான் தொலைத்தாய்?
பணத்தையா ஏதாவது பொருளையா
ஐயோ அதுவெல்லாம் இல்லை
தேடற்கரிய தேட்டமல்லவா அது.
ஒன்றா இரண்டா சொல்லி அழ
எனது நிலம்
நிலம் நிறுவிய வாழ்க்கை
வாழ்க்கை வடித்த உறவுகள்
உறவுகள் உகுத்த நேசம்
நேசம் வளர்த்த மொழி
மொழி மொழிந்த பண்பாடு
பண்பாடு தந்த பொறுப்புணர்வு
பொறுப்புணர்வு வகுத்த கடமை
கடமை வடித்த உரிமை
உரிமை இழந்த எனது தேசம்
இப்படி அடுக்கடுக்காய்...
எல்லாவற்றையும்.
தொலைந்ததா இல்லை தொலைத்தோமா?
மீண்டும் மீண்டும் கேட்கிறது
மிரண்டு போன என் மனம்.
விடை தேடி நானும்
விரதமிருக்கிறேன்
ஊர்கூடி.
- குழந்தைக் கவிஞன் -

1 comment:

sakthi said...

அருமையாக இயம்பி உள்ளீர்கள்

வாழ்த்துகள்