Saturday, May 2, 2009

தூக்கத்தை தொலைத்தால் ஆபத்து!

படுத்தால் தூக்கமே வர மாட்டேங்குது. இரவு வந்தாலே டென்ஷன் ஆகிவிடுகிறேன் என்று சொல்பவரா நீங்கள்? அப்படியென்றால், உங்களுக்கு தற்கொலை எண்ணம்கூட வரலாம் என்று எச்சரிக்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு.

சமீப காலமாக உலக அளவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு 88 லட்சம்பேர் வரை தற்கொலை செய்து கொள்கிறார்களாம்.

ஒருவர் தற்கொலை செய்துகொள்ள பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்றுதான், எனக்கு தூக்கம் வரமாட்டேங்குதே என்ற சிந்தனை என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

சீரோடோனின் என்னும் வேதியியல் பொருள்தான் மனதின் தன்மையை நிர்ணயிக்கிறது. சீரோடோனின் நிலையற்ற தன்மைக்கும் தூக்கமின்மை முக்கிய காரணமாகிவிடுகிறது. அதனால்தான், தற்கொலை சிந்தனை ஏற்படு கிறதாம்.

அதனால் நன்றாக ஆழ்ந்து தூங்குங்கள். குறைந்தது 7-8 மணி நேரமாவது தூங்குங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தூக்கம் உடனே வர எளிதான வழியையும் அவர்கள் காட்டுகிறார்கள். உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். தேவையில்லாமல் மனதில் எந்த விஷயத்தையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். படுக்கையில் நீங்கள் அமரும்போது உங்கள் சிந்தையில் எந்தவொரு குழப்பமான விஷயமும் இருக்கக்கூடாது.

இப்படி இருந்தால் சட்டென்று தூக்கம் வரும். நல்ல தூக்கம் இருந்தால் நோய்களும் வராது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

No comments: