Tuesday, May 19, 2009

வரமும் சாபமும்


நாம் அடுத்தவர்களுக்கு எதைத் தருகிறோமோ அது நமக்குத் திரும்பிவந்து சேர்கிறது. பன்மடங்காக வருகிறது - வரமாகவேனும் வரலாம் சாபமாகவேனும் வரலாம்.

நாம் எதைத் தருகிறோம் - எப்படித் தருகிறோம் என்பதைப் பொறுத்தது அது
நாம் மலர்களைத் தந்தால் அது மாலையாகத் திரும்பிவரும் -
நாம் விதைகளைத் தந்தால் அது விருட்சமாகத் திரும்பி வரும் -
நாம் முட்களை அனுப்பினால் மலர்களை எதிர்பார்க்க முடியாது -
எட்டிக் காயை அனுப்பிவிட்டுக் கட்டிக்கரும்பை எதிர்பார்க்க முடியாது -
வாழ்த்துகின்றபோது அது எல்லா இடங்களும் இருந்தார்கள் -
அந்த இனிய எல்லா இடங்களிலும் ரீங்காரமடிக்கும் -
நாம் புன்னகைத்தால் எதிரே வருகிறவர்கள் புன்னகைத்துத்தான் தீரவேண்டும் -

'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்'
என்று திருக்குறளும்,

'தினை விதைத்தவன் தினையறுப்பான்
வினை
விதைத்தவன் வினையறுப்பான்,

என்கிற முதுமொழியும்

வாழ்க்கையை நமக்கு வாசித்துக் காட்டுகின்றன.

இரண்டு நண்பர்கள் வெகுநாள் நகமும் சதையுமாக இருந்தார்கள்.
சின்ன மனஸ்தாபம்.
அவர்கள் நெருக்கமாக இருந்ததே பலருக்குப் பொறாமை - எப்படியாவது அவர்களைப் பிரித்துவிடவேண்டும் என எண்ணுபவர்கள் சிலர் இருந்தார்கள்.
அவர்களில் சிலர் இந்த விரிசலை எப்படியாவது பெரும் பிளவாக்கி விடவேண்டும் என நினைத்தார்கள்.
'உன்னைப் பற்றி அவன் அப்படிச் சொன்னான்' என மாற்றி மாற்றிச் சொல்லுகிறார்கள்.
'அவனைப் பற்றி எனக்குத் தெரியாதா?'
'அவன் சுயரூபம் தெரியாதா?
என்று அவர்கள் மாறி மாறி வைய அவர்கள் நிரந்தரமாகப் பிரிகின்ற நிலை ஏற்படுகிறது.
இதை நல்ல இதயம் படைத்த ஒரு பெரியவர் பார்க்கிறார்.
இந்த நல்ல நண்பர்கள் பிரியக்கூடாது என்று உளமார நினைப்பவர்.
ஒரு நண்பனிடம் சென்று
"நீ தான் அவனைப் பற்றி இல்லாதது பொல்லாததெல்லாம் சொல்லுகிறாய்; ஆனால் அவன் உன்னைப்பற்றி யாராவது குறை சொன்னால் எப்படிக் கோபப்படுகிறான் தெரியுமா?" என்றார்.
"அப்படியா! அப்படித் தான் சொன்னானா?" என்று கேட்டான்.
அடுத்தவனிடமும் அப்படியே சொன்னார்.
அவனும் நெகிழ்ந்து போனான்.
இருவரும் இணைந்தார்கள்.
அடுத்தவன் நல்ல எண்ணத்தை விதைக்கும்போது, அடுத்தவர்கள் அதில் முள்ளை நடமுடியாது என்பதுதான் உண்மை.

வரலாற்றில் அக்பர் ஒரு வித்தியாசமான மன்னர் - அதிகாரத்தைக் காட்டிலும் மென்மையான ஒரு மனம் அவரிடம் இருந்தது. அதனால்தான் அவரை 'மகா அக்பர்' என்று அழைத்தார்கள்.

அவர் இசையை நேசித்தவர் - இயற்கையை நேசித்தவர் - தான்சேன் என்கிற இசைக்கலைஞன் அவரை எப்போதும் இசைவெள்ளத்தில் மூழ்கடித்தார் -
மதம், மொழிகளைக் கடந்து அறிவு ஜீவிகளை நேசித்தவர் - கௌரவித்தவர். அதனால்தான் எல்லா மதங்களையும் ஒருங்கிணைத்து 'தீன் இலாஹி' என்கிற புதிய மார்கத்தை அவர் நிர்மாணிக்க முனைந்தார்.

'பதேபூர் சிக்ரி' என்கிற புதிய தலைநகரை அமைத்தார் - அவர் சைவ உணவைச் சாப்பிடுபவராகவே இருந்தார் என்பது ஒரு சுவாரசியமான சேதி - 'Hari Om Tat Sat' என்ற நூலில் படித்த சம்பவம்:-

அக்பர் நாமாவில் அவரைப் பற்றிய ஒரு சம்பவம் இடம் பெற்றிருக்கிறது.

அரசவையிலிருந்தபோது அவருடைய விதூஷகர் பீர்பால் அக்பர் காதில் ஒரு கருத்தைக் கூறுகிறார்.

அக்பரும் அந்தக் கருத்தை விளையாட்டாகச் செயல்படுத்த நினைகிறார்கள். "நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்களோ - அது நாளை அவைக்குள் உங்களுக்கே திரும்பி வரும்" என்கிறார்.

அதை பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறார்.

பீர்பாலுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். பீர்பால் உடனே தன் அருகில் இருந்தவரை ஓங்கி அறைவிட்டார்.
தலைநகர் முழுவதும் இந்த விளையாட்டுத் தொடர்ந்தது.
அன்று இரவு அக்பர் அந்தப்புரம் வந்தபோது, அவர் பட்டத்து ராணி அவர் கன்னத்தில் ஒரு அறை விட்டார்.
அக்பர் "என்ன ஆனது?" என்று அதிர்ந்தார்.
"நகரம் முழுவதும் இந்த விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. என் பணிப்பெண் எனக்குத் தந்த அறையை - நான் உங்களிடம் தந்துவிட்டேன்" என்று பட்டத்து ராணி கூறினார்.

க் கதை வெறும் சம்பவம் அல்ல - ஒரு படிப்பினை - நம்மிடமே நாம் அனுப்பியது திரும்பும் என்பது பற்றி விவரமாகச் சொல்லும் சாகித்யம் - இறைவன் மீது விழுந்த அடி எல்லார் மீதும் விழுந்தது - பிட்டுக்காக மண் சுமந்த கதையில்.

துப்பாக்கியைப் பிடித்தவன் துப்பாக்கியால் சாவான்,
புல்லாங்குழல்
பிடித்தவன் இசையால் நிறைவான்.

இது எழுதப்படாத சட்டம்!

இறையன்பு IAS
எழாவது
அறிவு

No comments: