Monday, May 18, 2009

இலங்கையில் யுத்தம் முடிந்துவிட்டதா?


இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் யாவும் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும், பிரபாகரன், பொட்டம்மான், சூசை உட்பட சகல தலைவர்களும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், விடுதைப் புலிகள் என யாரும் இல்லை, அவர்கள் எல்லோரும் பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டார்கள், எனவே யுத்தநிறுத்தம் - பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஓர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இலங்கை இராணுவமும், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும் கூறுகின்றார்கள்.

வடக்கு - கிழக்கை சிங்கள இராணுவம் முழுமையாக ஆக்கிரமித்தால் மாத்திரம் போதாது, விடுதலைப் புலிகளும், குறிப்பாக பிரபாகரனும் கொல்லப்பட்டாலே யுத்தத்தில் முழுமையான வெற்றி அடைந்ததாக சிங்கள மக்களுக்கு காட்டமுடியும் என்பதால், இன்று காலையில் இருந்து சிங்கள இராணுவமும், சிங்கள ஊடகங்களும் பிரபாகரன் உட்பட பல புலித்தலைவர்களை கொன்று விட்டதாக பிரச்சாரம் செய்துகொண்டிருன்கின்றார்கள். www.defence.lk என்ற இராணுவத்தின் இணையத்தளம் பிரபாகரன் கொல்லப்பட்டார், உடல் கண்டுபிடிப்பு என்று கரடிவிட்டது. ஆனால் அந்தச் செய்தி பின்னர் அதிலிருந்து அகற்றப்பட்டது. கொல்லப்பட்ட தலைவர்களின் உடலங்கள் எதுவும் காட்டப்படவில்லை. பிரபாகரனின் மகனான சார்ல்ஸ் அன்ரனி என்பவரது சடலம் என ஓர் முகம் உலகமெங்கும் ஒளிபரப்பப்பட்டது. இராணுவம் பிரபாகரன் இறந்தாரா? இல்லையா? என்பதை இன்னும் திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை. ஆனாலும் உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சிகளும், வானொலிகளும், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகவே செய்திகளை வெளியிட்டுள்ளன.

எனவே நாளை புலிகளைத் தோற்கடித்து விட்டதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை மாத்திரமல்ல, பிரபாகரனையும் கொலை செய்துவிட்டதாகக் கூறினால் மாத்திரமே, ஆயிரக்கணக்கான இராணுவத்தின் இழப்புக்களுக்கு பதிலாக இருக்கும். கடந்த மூன்று மாதத்தில் மாத்திரம் 20,000க்கும் மேற்பட்ட இராணுவம் கொல்லப்பட்டும் 45,000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் இராணுவத் தரப்பிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. இப்படியான சூழ்நிலையில் தாங்கள் இடத்தைத்தான் கைப்பற்றினோம் - புலிகளை அழிக்க முடியவில்லை என ஜனாதிபதி கூறுவாரானால் அவரது அரசைக் காப்பாற்றுவதே கடினமான ஓர் காரியமாகிவிடும். எனவே வதந்திகளை உருவாக்கி விடுவதன் மூலம் சிங்கள மக்களை மாத்திரமல்ல, புலம்பெயர் நாடுகளில் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களைக் குழப்பி விடும் வேலையையும் இதனூடு செய்ய முடியும்.

யுத்தக் களத்தில் பாரிய இழப்புக்களைச் சந்தித்து, பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள சிங்கள அரசாங்கம், வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்வதாக இருந்தால், யுத்தத்திற்கு ஓர் முடிவு கட்டிவிட்டதாக கூறவேண்டிய அவசியம் இருக்கின்றது. எனவே புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இழந்தமையையும், புலிகளின் சில முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டதையும் வைத்து பிரபாகரன் உட்பட்ட முழுப்புலி இயக்கத்திற்குமே செத்தவீடு கொண்டாடும் ஓர் போக்கை கொழும்பில் பார்க்கக் கூடியதாக உள்ளது. ஆனால் அது உண்மையல்ல, யதார்த்தமுமல்ல என்பதையே அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறான பிரச்சாரங்கள் குறுகிய காலத்திற்கு ராஜபக்சேவுக்கு உதவலாம், ஆனால் நீண்ட காலப் போக்கில் அது எதிர்விளைவுகளையே உருவாக்கும். யுத்தவடிவங்கள் மாறலாம், ஆனால் யுத்தம் முழுமையாக தீர்ந்து விட்டதாக அர்த்தப்படாது.

4 comments:

Anonymous said...

இவ்வாறான பிரச்சாரங்கள் குறுகிய காலத்திற்கு ராஜபக்சேவுக்கு உதவலாம், ஆனால் நீண்ட காலப் போக்கில் அது எதிர்விளைவுகளையே உருவாக்கும்.// unmaya sollirukiringa. evlo nalaikuthan ethana thadavathan prabhakaranai konnutam endu solla poranga endu paapam. VARUVAR ENGAL THALAIVAR.VANTHU ELLATHUKUM THEERVU KANUVAN. ARANDAVANUKU IRUNDATHELLAM PEI MATHIRI sla ku ELLAME PRABHAKARANATHAAN THERIVANGA. MAAVIRANUKU MARANAM ENPATHE ILLAI.

உளறுவாயன் said...

நன்றி

தொடர்ந்து எமக்கு ஊக்கமும்,
ஆதரவும் தருவீர்கள் என நம்புகிறோம்.

உளறுவாயன் said...

நன்றி

கலையரசன் said...

நெஞ்சம் பொருக்குதில்லையே, இந்த அவதூறு பரப்பும் நிலைகெட்ட மானிடரை நினைத்துவிட்டால்...
www.kalakalkalai.blogspot.com