Monday, May 11, 2009

அறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதை

அரச நிர்வாகம்

ஐரோப்பிய நாட்டிலே 'பிரடெரிக் தி கிரேட்' என்ற மன்னன், ' ஏழைகளுக்கு எவ்வளவோ செய்கிறேன். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை என்று குறை கூறுகிறார்களே என்?' என்று ஒரு பெரிய விருந்தின் போது தனது பிரபுக்களையும், அமைச்சர்களையும் பார்த்துக் கேட்டான்.

வயது முதிர்ந்த அமைச்சர் ஒருவர் 'நான் இதற்குப் பதில் சொல்கிறேன்' என்று சொல்லிவிட்டு, விருந்தில் தனக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு ஐஸ்கட்டியை எடுத்துப் பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்து, 'இதை அடுத்த பிரபுவிடம் கொடு' என்றார். அவர் அவரிடத்தில் கொடுத்தார். அந்தப் பிரபு தன் பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்தார். இப்படி 50 60 கைகள் மாறி, கடைசியில் மன்னர் கையில் போய்ச் சேரும் போது இரண்டு சொட்டுத் தண்ணீர் தான் மிச்சம் இருந்தது. 'எங்கே ஐஸ்கட்டி?' என்று கேட்டான் மன்னன்.

'உங்களுக்கு கிடைத்த இரண்டு சொட்டுத் தண்ணீரும் முதலில் ஐஸ்கட்டியாகத் தான் புறப்பட்டது. இத்தனை இடைத்தரகர்கள் வழியே வந்ததாலே, கடைசியில் உங்களுக்கு இரண்டு சொட்டுத் தண்ணீர் தான் கிடைத்தது. நீங்கள் ஏழைகளுக்குச் செய்யும் உதவிகளும் இப்படி தான்!' என்று விளக்கினார் அந்த அமைச்சர்.


No comments: