Saturday, May 2, 2009

சிரிங்க... புத்துணர்வு பெறுங்க...

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது பழமொழி. இது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்று நிரூபித்து இருக்கிறார்கள் மருத்துவர்கள்.

இருந்தாலும், இந்த சிரிப்பு பற்றி அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ஜப்பானைச் சேர்ந்த மனோதத்துவ பேராசிரியரான யோஜி கிமுரோ என்பவர், ஒருவர் எந்த அளவுக்கு சிரிக்கிறார் என்பதை அளவிட ஒரு டிஜிடல் கருவியையே கண்டுபிடித்து இருக்கிறார்.

பல் தெரிய சிரிப்பதைவிட வாயாற சிரிப்பதுதான் உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும் என்கிறார் யோஜி கிமுரோ. அவர் இதுபற்றி கூறும்போது, `நாம் வாய்விட்டு சிரிக்கும்போது ஒருவகை மின் அதிர்வுகள் நம் உடல் முழுவதும் பரவுகிறது. இவை, உடல் சுரப்பிகளின் செயல்பாட்டை தூண்டிவிடுகின்றன. ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயத்துக்கும், வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள தசைகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால், சுறுசுறுப்பாக, புத்துணர்வோடு நாம் செயலாற்ற முடியும்' என்றார்.

யோஜி கிமுரோ கண்டுபிடித்துள்ள டிஜிடல் கருவி, நாம் சிரிக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை வைத்து, நாம் எந்த அளவுக்கு சிரிக்கிறோம் என்பதை கணக்கிடுகிறது.

No comments: