Monday, May 11, 2009

இலங்கையிலிருந்து இங்கிலாந்தைச் சேர்ந்த 3 செய்தி தொடர்பாளர்கள் வெளியேற்றம்

இலங்கை போர் தொடர்பான செய்திகளை இங்கிலாந்தின் `சேனல் 4 நியூஸ் ஏசியா' சேனலின் செய்தித் தொடர்பாளர்கள் நிக் பாட்சன் வால்ஷ், புகைப்படக்கலைஞர் மாட் ஜெய்பர், தயாரிப்பாளர் பெஸ்சி டியூ ஆகியோர் கொழும்பில் இருந்து சேகரித்து அனுப்பி வந்தனர்.

இவர்கள் மூவரையும் நேற்று இலங்கை அரசு அதிரடியாக வெளியேற்றியது. தவறாக செய்திகளை வெளியிட்டு நாட்டின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் இவர்கள் செயல்பட்ட காரணத்திற்காக இலங்கையை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என்று தேசிய பாதுகாப்பிற்கான தலைமை செய்தி தொடர்பாளர் லட்சுமண் ஹூலுகல்லே தெரிவித்தார்.

இதுபற்றி சேனல் 4 நியூஸ் ஏசியா, விடுத்துள்ள அறிக்கையில், "அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் சித்ரவதைக்கு உள்ளாவது பற்றி செய்தி வெளியிட்டதால் எங்கள் செய்தியாளர்களை இலங்கை அரசு வெளியேற்றி விட்டது'' என்று தெரிவித்து இருக்கிறது.

No comments: