Friday, March 20, 2009

ரதன் கவிதைகள்


வீரம்

ஒரு மாடு !

ஒரே ஒரு மாடு !

ஐந்நூறு தமிழர்கள்.


பலி ?

ஆயிரம் கிடாக்களின்

ரத்தச் சேற்றில்

மல்லாந்து கிடக்கிறாள்

மாசாணி அம்மன் !

நிமிர்ந்து ஏப்பம் விட்டது ஊர் !


ஆறாம் அறிவு

புலிக்குக் கூண்டு

மீனுக்குத் தொட்டி

ஆட்டுக்குப் பட்டி

மாட்டுக்குத் தொழுவம்

மனிதன் எப்பவும்

குற்றவாளிக் கூண்டில் . . .

- ரதன் சந்திரசேகர் -

1 comment:

Anonymous said...

YAA YAA YAA