Saturday, March 14, 2009

இன்றைய ஈழத்தின் சூழலில் சர்வதேச சமூகத்தின் கடமை

முதலில் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக . நா. அதிகாரிகள் சிலர் வெளியிட்ட கருத்துக்களை பாருங்கள்;

MR. GARETH EVANS,
PRESIDENT,
INTERNATIONAL CRISIS GROUP.

"
நாம் Cambodia, Balkans இலிருந்து Northern Ireland, West Africa, Nepal வரை நல்லபடியாக சமாதான பேச்சுக்களை நடத்தியிருக்கிறோம். இதுவரை தோல்வியாக அமைந்தவை Srilanka வும் Darfur உம் மட்டுமே".

MR. LOUISE ARBOUR,
COMMISSIONER,
UNO HUMAN RIGHTS COMMISSION.

"
இலங்கையில் எராளமான ஆனால் உறுதிப்படுத்தப் படாத கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போகும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சட்டம் ஒழுங்கு பலவீனமாக உள்ளது. தண்டனை அளிப்பதில் உள்ள பாராமுகம் அதிர்ச்சி அளிக்கிறது."

MR. WILLIAM CLARANES,
PRESIDENT,
(1988 - 1991)
UNHCR FOR SRILANKA.

"
இலங்கை வடக்கு - கிழக்கில் அலைகளாய் நடைபெறும் கொடூர சம்பவங்கள் . நா. வின் பாதுகாப்பு கூட்டமைப்பு சம்பந்தமான நடவடிக்கைகளின் நேர்மையை மிகவும் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. இவ்விடயத்தில் . நா. தோல்வியடைய சர்வதேச சமூகம் அனுமதிக்காது."

MR. KENNETH BUSH,
MEMBER OF SWEDISH DEVELOPMENT CO-OPERATIVE ORG,
PEACE AND CONFLICT IMPACT ASSESSMENT - 2001.

"
நாட்டின் வட கிழக்கு பகுதியில் சமாதனம் போராட்டம் சம்பந்தபட்ட விடயங்களில் காக்கிச்சட்டைகளின் செயல்பாடுகள் பாரபட்சமாக உள்ளன. இப்பொழுது இராணுவத்தின் பிடியில் வட கிழக்கு பகுதி சிக்கியுள்ளது."

மேற்கண்ட அறிஞர்களின் கூற்றுக்கள் இலங்கை ஒரு Failed State என்பதைக் காட்டுகிறது. உலக வங்கியின் பணிப்பாளர் கூட இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு இல்லாமல் இலங்கையில் அபிவிருத்தி சாத்தியம் இல்லை என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

சுனாமிக் கட்டமைப்புக்கான பிரேரணை, ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை, இரண்டு சுற்று ஜெனிவா பேச்சுவார்த்தை போன்றன சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் நடைபெற்றபொழுதும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தை அவற்றை ஏற்றுகொள்ள வைக்கவோ அவை தொடர்பாக பேச வைக்கவோ சர்வதேசச் சமூகத்தால் முடியவில்லை. 18 வருடங்களாக இணைந்திருந்த வடக்கு-கிழக்கு மாகாணங்கள் பிரிக்கபட்டபொழுது இந்தியாவினாலோ சர்வதேசச் சமூகத்தினாலோ ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த அரசாங்கம் வாகரையில் மக்களைப் பட்டினிபோட்டு, அவர்கள் மீது குண்டு வீச்சுக்களை நடாத்தி, பல நூறு பேர்களைக் கொலை செய்து, மூன்று லட்சம் மக்களை அகதிகளாக்கிய போதும் சர்வதேச சமூகத்தால் எதுவும் செய்யமுடியவில்லை. பல நூறு பேர் கடத்தி கொல்லபட்டும் இன்னும் பல பேர் காணாமல் போய்க்கொண்டிருந்த பொழுதும்கூட சர்வதேசச் சமூகத்தால் அதற்கெதிராக எதுவும் செய்யமுடியவில்லை. இன்று வன்னி யுத்தபிரதேசத்துக்குள் நடந்துகொண்டிருக்கும் மனிதப் பேரழிவுகளையும் சர்வதேச சமூகத்தால் நிறுத்த முடியவில்லை.

ஒரு நாட்டின் ஒரு சிறுபான்மைத் தேசிய இனம், அதிலும் 1796இல் பிரிட்டிஷ் இராச்சியம் நாட்டைத் தனது காலனியாகக் கொண்டுவரும் வரை தமக்கென ஓர் அரசாட்சியை கொண்டிருந்த இனம், இன்றும் தனக்கென தொடர்ச்சியான ஒரு நிலபரப்பையும் மிகவும் பழமை வாய்ந்த, தனித்துவமான மொழி, கலை, கலாச்சாரப் பண்பாடுகளையும், தனக்கெனச் சிறந்த பொருளாதார கட்டமைப்பையும் கொண்ட இனம், பெரும்பான்மைத் தேசிய இனத்தால் அழிந்தொழிக்கபடுவதை, அதுவும் முற்றுமுழுதாக ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கிய, இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட Universal Declaration of Human Rights, the International Covenants on Human Rights போன்ற கட்டுபாடுகளை மறந்துவிட்டு, ஓர் தேசிய இனத்தைப் பூண்டோடு அழிப்பதை நிகழ்ச்சிநிரலாகக் கொண்டு ஓர் அரசு செயற்படுவதை நிறுத்தச் சர்வதேச சமுதாயத்தால் முடியாவிட்டால், அச்சிறுபான்மைத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுதான் வளர்ச்சியடைந்த, ஜனநாயகத்தில் அக்கறைகொண்ட நாகரிகமான அரசுகளின் செயற்பாடுகளாக இருக்க முடியும். அப்படியான செயற்பாடு ஒன்றுதான் இலங்கை அரசாங்கத்தைச் சிந்திக்கத் தூண்டும்.

இலங்கைத் தமிழ் மக்களின் இறைமையை நாம் இன்னும் சிங்கள அரசிடம் தாரை வார்க்கவில்லை என்பதுடன், வடக்கு, கிழக்குத், தமிழ் மக்களோ அவர்களது பிரதிநிதிகளோ 1947, 1972, 1978ஆம் ஆண்டுகளின் அரசியல் சாசனங்கள் எதனையும் ஏற்றுக் கொள்ளவுமில்லை; அவற்றின் உருவாக்கத்தில் பங்குபற்றவுமில்லை. அதுமாத்திரமல்லாமல், வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் தமது ஆணையை ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து தமிழரசுக் கட்சிக்கும் தமிழர் கூட்டணிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும்தான் வழங்கி வந்திருக்கின்றர்களே தவிர எந்தவோர் சிங்கள அரசியல் கட்சிக்கோ அல்லது அதன் அடிவருடிகளுக்கோ அல்ல என்பதை உணர்ந்துகொண்டு தமிழ் மக்களின் இறைமை என்பது எம்வசமே இருக்கின்றதேயன்றி, அதனை நாங்கள் இலங்கை அரசிடம் கையளிக்கவில்லை என்பதை புரிந்துக்கொண்டு, தமிழ் மக்களைப் பலாத்காரமாகத் தம்முடன் இணைத்து வைத்து அவர்களை அழித்தொழிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கபடநாடகத்தைப் புரிந்துக்கொண்டு அவர்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதே சர்வதேசச் சமூகத்தின் முன்னால் உள்ள ஒரே மாற்றீடாகும். இவ்வாறான ஒரு நடவடிக்கையின் ஊடாகத்தான் இலங்கையில் யுத்தத்தை நிறுத்திச் சமாதானத்தை உருவாக்க முடியும். அவ்வாறன சாமாதானம் உருவாகாதவரை தமிழ் மக்களை அழித்தொழிக்கும் யுத்தத்திற்கான திட்டங்களாகவே அனைத்து நடவடிக்கைகளும் இருக்கும்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் MP - வரவு செலவு திட்ட உரையின் ஒரு பகுதி 19.11.2007


சர்வதேச சமூகம் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் சமாதான சகவாழ்வு என்பது இலங்கை மக்களின் கனவாகிப் போகும்.

No comments: