Thursday, March 19, 2009

இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் - கலாநிதி ஆ.க.மனோகரன்

கலாநிதி ..மனோகரன் அவர்கள் தனது கலாநிதி பட்டத்திற்கான ஆய்வாக எழுதயுள்ள "தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் ஒரு வரலாற்றுப் பார்வை 1948 - 2007 " என்ற புத்தகம், பாக்கர் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 1948 - 2007 வரை தான் ஆய்விற்கான களமாக ஆசிரியர் எடுத்துக் கொண்டாலும் கூட, தமிழர்களின் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றையும், ஐரோப்பிய காலனி ஆதிக்க வரலாற்றையும் கொண்டு வந்தது மாத்திரம்மல்லாமல், இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிங்கள, பௌத்த பேரினவாதம் முழு இலங்கையிலும் தனது எதேச்சாதிகாரத்தை நிறுவ விரும்பியமையும், அதன் பிரகாரம் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் எவ்வாறு அரசாங்கத்தால் திட்டமிட்ட முறையில் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது என்பதை புள்ளி விபரங்களின் துணையுடன் மாவட்ட ரீதியாக நிறுவி உள்ளார். அது மாத்திரம்மல்லாமல், மொழி, நிலம், கல்வி, கலாச்சார விழுமியங்கள் எவ்வாறு ஒழிக்கப்பட்டது என்பதும், இலங்கையை Mono Ethnic State ஆக உருவாக்கத்தில் அரசு எவ்வளவு அதிகாரத் தனமாக செயற்படுகின்றது என்பது பற்றியும், அரசுடன் தமிழ்த் தலமைகளால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் எவ்வாறு அவர்களால் மீறப்பட்டன என்பது உட்பட, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் குறை நிறைகள், இலங்கைப் பிரச்சனையின் சர்வதேசப் பரிமாணங்கள், இந்தியாவின் பங்கு போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. வாசிப்பவர்களின் நலன்கருதி 22 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக கற்க விரும்பும் மாணவர்களுக்கும், இலங்கை சமாதான தீர்வு தொடர்பாக சிந்திப்பவர்களுக்கும், இலங்கை இன மோதல்கள் தொடர்பாக அறிய விரும்புபவர்களுக்கும், முழுமையான தகவல்கள் தரக்கூடிய ஒரு புத்தகமாக இது விளங்குகின்றது.


ஈழத்தின் இனப் பிரச்சனை தொடர்பான முழுமையான ஆய்வைக் கொண்ட முதலாவது தமிழ் புத்தகம் என்பதில் சந்தேகமில்லை.

No comments: