Monday, March 16, 2009

யுத்த நிறுத்தம் அவசியம்

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் யுத்தம் முடிந்துவிடும். புலிகள் ஒழிக்கப்பட்டு விடுவார்கள். ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ராணுவத்திடம் சரண் அடைவதை தவிர புலிகளுக்கு வேறு வழியே இல்லை. இது ராணுவ கமாண்டர் பொன்சேகாவும் ஜனாதிபதி ராஜபக்சேவும் தங்கள் பதவிக்கு ஒவ்வாத வார்த்தைகளால் விடுத்த சவால்கள் ஆனால் இன்றும் உச்ச நிலையில் யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

முல்லைத் தீவு காட்டுபகுதியில் புலிகளை முடக்கி விட்டோம். இந்த வருடம் முடிவதற்குள் (2009) புலிகளை அழித்து விடுவோம். இது இலங்கை பிரதமர் விக்கிரம(நாய்)யக்காவின் இன்றைய கொக்கரிப்பு. இதில் ஒன்று தெளிவாக தெரிகிறது. புலிகள் நிலத்தை இழந்து இருக்கிறார்கள். பலத்தை இழக்கவில்லை. பிரதமரின் ஒரு வருட காலக்கெடு பலவருடம் நீட்டுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. புலிகள் -ராணுவ யுத்தத்திற்கிடையில் சிக்கி தவிக்கும் அப்பாவி தமிழ் மக்களின் நிலை- இந்த காலக்கெடு வன்னியிலுள்ள தமிழ் மக்களை ஒட்டு மொத்தமாக படுகொலை செய்து அழிப்பதற்காக ஒரு போர் முழக்கமாகவே கருத முடிகிறது. விடுதலை புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிக்கவே இராணுவம் யுத்தம் புரிகிறது என்று சொல்லிச் சொல்லியே குறுகிய காலத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை கொன்று குவித்திருக்கிறார்கள். அந்தத் தொகைக்கு மேல் கை, கால் இழந்து முடமாக்கப்பட்டிருக்கிறார்கள். காயப்பட்ட குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போதிய அளவு மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் மரணித்திருக்கிரர்கள். இதில் கொடுமை என்னவென்றால் விமான தாக்குதலுக்கு பயந்து தங்கள் பாதுகாப்பிற்காக தாங்களே வெட்டிய பதுங்கு குழிக்குள் அடைகலம் புகுந்த மக்கள் உயிருடன் புதைந்து சமாதியாகிறார்கள்.

விமான குண்டு மழை, பல்குழல் பீரங்கி தாக்குதல், குறுரக பீரங்கி தாக்குதல் கடல்வழி தாக்குதல், சர்வதேச சட்டங்களுக்கு சவால்விடும் அளவிற்கு இந்த இரக்கமற்ற யுத்தத்தை தொடர்ந்து நடத்தி செல்லும் இலங்கை அரசை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகத்திற்கு முடியவில்லை. காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை உணவு என்று யோசிக்கிறார்களே தவிர இந்த காயங்கள் மரணங்கள் வராமல் தடுப்பதற்கான எந்தொரு முயற்சிகளையும், அழுத்தத்தையும் இலங்கை அரசுமீது கொடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் இன்னும் உறுதியாக முயற்சிக்கவில்லை. பேச்சளவில் மட்டுமே யுத்தத்தை நிறுத்துங்கள் என்று இலங்கை அரசிடம் இரந்து வேண்டுகோள் விடுக்கிறார்களே தவிர யுத்தத்தை நிறுத்து! என்று கடுமையாக எச்சரித்து ஒருவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்மையில் பாலஸ்தீனத்தில் நடந்த படுகொலைகளுக்கு எதிராக இஸ்ரேல் நாட்டுடன் கடுமையாக நடந்து கொண்ட .நா.சபை மற்றும் உலக நாடுகள் சபை தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த தவறி இருக்கிறது .இலங்கை அரசுடன் கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் கவலையளிக்கும் செய்தி. வன்னியில் சர்வதேச தொண்டு நிறுவனங்களை காயப்பட்ட மக்களுக்கு உதவ விடாமல் துரத்தியடிக்கும் ராஜபக்சே அரசுமீது .நா.சபையால் கண்டன தீர்மானம் கொண்டுவர முடியவில்லை. ஆனால் இராக் நாட்டில் குர்தீஸ் இன மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கான சர்வாதிகாரி சதாம் உசைன் விமான தாக்குதல் ஏற்படுத்திய போது .நா.சபை அதை கண்டித்து அமெரிக்க உதவியுடன் குர்தீஸ் இன மக்கள் வாழும் பிரதேசத்தின் மேல் ஈராக்கின் எந்த விமானமும் பறக்க தடை விதித்தது. அதில் வெற்றியும் கண்டது. ஆனால் .நா.சபை இலங்கை விவகாரத்தில் மௌனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை.

முல்லை தீவு காடுகளுக்குள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இன்றி ஏங்கித் தவிக்கும் அப்பாவி தமிழ் மக்களை காப்பதற்கு இலங்கை யுத்த விமானங்கள் தமிழ் பிரதேசத்திற்குள் வான் பகுதியில் பறப்பதற்கு .நா.சபை தடை விதிக்க வேண்டும். பல்குழல் பீரங்கி தாக்குதலுக்கும் தடை விதிக்க வேண்டும். இதை விடுத்து காயப்பட்டவர்களுக்கு மருந்தும், உணவும் மட்டும் தான் எங்களால் கொடுக்க முடியும் என்றால் அதுவும் உங்களால் (.நா.சபை) தொடர்ந்து கொடுக்க முடியாது. ஏனென்றால் அந்த அப்பாவி மக்களின் உயிர்கள் போனபின் மருந்தும் உணவும் தேவைப்படாமல் போய்விடும். இதை .நா.சபையும் சர்வதேச நாடுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

யுத்த நிறுத்தம் வேண்டும் என்பதை தமிழக அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், மாணவ அமைப்புகள் பிரிந்து நின்று சொன்னாலும் அது 6 கோடி தமிழ் மக்களின் ஒரே குரலாகவே கருதிக்கொள்ள வேண்டும். தமிழக மக்களின் ஆதரவு ஈழ தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது. மேலும் இந்த இக்கட்டான சூழலில் இந்திய மத்திய அரசு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தினால் காலத்தால் செய்த மிக பெரிய உதவியாகும். இது சர்வதேச சமூகத்தில் இந்தியாவிற்கு ஒரு உயர்ந்த இடத்தை கொடுக்கும்.

இந்தியாவும் உலகநாடுகளும் தமிழ் மக்களின் ஆதங்கத்தை பூர்த்திசெயுமா ???

2 comments:

muraleetharan said...

Iah jkpoh tzf;fk;
vy;yhk; rhp ,d;Dk; vt;tsT fhyk; jhd; cyfj;ijAk; ,e;jpahitAk; ,yq;ifiaAk; Fiw nry;ypf; nfhz;Nl ,Uf;fg; Nghwpas;. CJwij nfhQ;rk; rj;jkha; Gypapd;l fhjpiyAk; CJq;Nfh .......

Anonymous said...

ஐயா தமிழா வனக்கம்
எல்லாம் சரி இன்னும் எவ்வளவு காலம் தான் உலகத்தையும் இந்தியாவையும் இலங்கையையும் குறை சொல்லிக் கொண்டே இருக்கப் போறியள். ஊதுறதைக் கொஞ்சம் சத்தமாய் புலியின்ட காதுலையும் ஊதுங்கோ . . .
- முரளீதரன் -