Saturday, March 14, 2009

குறள் கூறும் அவள்


விலகிச் சென்றால் சுடுகிறாள்
நெருங்கிச் சென்றால் குளிர்கிறாள்
எங்கிருந்து பெற்றாள் இந்த அதிசய நெருப்பை?

நோயும் நோய் தீர்க்கும் மருந்தும்
ஓரிடம் உண்டென்றால்
அது என்னவளின் பூவுடலில் மட்டுமே

நான் விரும்பும் எச்சுவையும்
அவளிடம் இருப்பதால்
அதிசயப் பொருளவள்

என் ஐம்புலனும் ஓரிடத்தில் கூடிப் பேசின
என்னவளோடு நான் கூடியவேளையில்

அவள் உடல் சாவா மருந்தெனும் அமுதமோ?
தழுவத் தழுவ உடல் செழித்து உயிர்த்தெழுகிறேன்.

No comments: