Friday, March 13, 2009

அழைக்கிறது ! இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம்

இந்திய சோவியத் கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUS), சோவியத்யூனியனில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக இந்திய கலாச்சார நட்புறவுக் கழகமாக (ISCUF) புது வடிவம் பெற்றுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற V. R. கிருஷ்ணையர் அவர்களை கௌரவ தலைவராக கொண்டு இக்கழகம் இயங்கி கொண்டிருக்கின்றது.

ஒன்றுபட்ட உலகம் - ஒற்றுமையான வாழ்க்கை - அனைவருக்கும் சுதந்திரம் என்ற இலக்கின் அடிப்படையில் உலக மக்களிடையே நட்புறவை வளர்ப்பது இக்கழகத்தின் நோக்கமாகும். அரசுகளுடன், அமைப்புக்களுடன், தனிமனிதருடன் என மூன்று நிலைகலளிலும் நட்புறவை ஏற்படுத்தும் முயற்சிகளில் எமது கழகம் ஈடுபட்டுள்ளது .

எமது திட்டங்கள்.
  • மக்கள் யாவரும் ஒருவரை ஒருவர் அன்னியமாக எண்ணாமல் எல்லோரும் எல்லோருக்கும் வணக்கம் சொல்லும் அளவுக்கு மனித நேயப் பண்பாட்டைஉருவாக்குதல்.
  • எந்த ஒரு தேசமும், பண்பாடு , கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே நிலைபெறுகின்றன. இந்தியாவும் அரசியல், புவியியல், எல்லைகளைக் கடந்து பண்பாட்டு ரீதியில் அமைந்ததொரு தேசம் என்ற உணர்வை உள்நாட்டிலும்வெளிநாடுகளிலும் ஏற்படுத்தி, அதன் பண்பாட்டுக் கூறுகளுடன் இணைந்த உறவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல், பிற பண்பாடுகளின்சிறப்புப் பண்புகளைப் போற்றுதல், பகிர்ந்து கொள்ளுதல், அதனுடன் உறவாடும் வழியை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றை எமது கழகம் செய்யும்.
  • இணையதள நிகழ்ச்சிகள் மூலம் நேரடித் தொடர்பில் ஈடுபட முடியாதவரை, பல்வேறு வகையான மின்னுலக நிகழ்வுகளில் ஈடுபடுத்தி ஒருங்கினைத்தலையும் எமது கழகம் செய்யும்.
  • பேதமற்ற சமூகம் என்ற நோக்கில் உலகில் உள்ள பேதங்கள் யாவையும் நீக்கவும், பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு நீதி கிடைக்கவும், ஆதிக்க வகுப்பினர் பிறரை அரவணைக்கத் தூண்டும் உணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
  • கலை, கல்வி, விளையாட்டு, இலக்கியம் ஆகியவற்றின் பரிமாற்றங்களுக்கு வழிகாட்டுவதன் மூலம் மனித குல ஒருமைப்பாட்டு உணர்வை எங்கும் விதைத்தல்.
  • மக்கள் சுதந்திரத்தைக் கட்டுபடுத்தும் சட்டங்களை அதிகமாக்காமலே ஆட்சி எந்திரத்தின் திறனை அதிகரிப்பதன் மூலம் சமூக ஒழுங்கினை நிலைநாட்ட வழிகாட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
இதுவரை எமது செயல்பாடுகள்
  • கூட்டம், விரிவுரை, கலந்துரையாடல்
  • பண்பாட்டுக் குழுவினர் பரிமாற்றம்
  • நாடகம், கவியரங்கம், பட்டிமன்றம்
  • கண்காட்சிகள், வியாபார அரங்குகள்
  • குறும்படங்கள், செய்திப்படங்கள், ஆவணப் படங்கள்
  • படிப்பகம், விளையாட்டரங்கம், கலையரங்கம்
  • நூல்கள், இதழ்கள், துண்டறிக்கைகள்
  • மொழிக் கல்விப் பரிமாற்றம்
  • பயிலரங்கம்
  • ஆய்வுகள், தகவல் சேகரிப்புகள்
  • இவை போன்ற பிற
வாருங்கள் இணைந்தே செல்வோம் ...

No comments: