Sunday, March 15, 2009

புதிய ஜனனம்


"ஓ அரசர்களே, அதிகாரிகளே
அவர்களெல்லாம்
வேறு இளைஞர்களுக்குள்ளே ஜீவிக்கிறார்கள்
உங்களை எதிர்த்து
மீண்டும் போர் செய்யத் தயாராக
அவர்களெல்லாம்
சகோதரர்களுக்குள்ளே வாழ்கிறார்கள்.
விடுதலைக்காக கொலை செய்யப்பட்ட கல்லறைகளில்
விடுதலை விதை வளராத கல்லறை எதுவுமே இல்லை
இந்த விதைகளெல்லாம்
மீண்டும் விதைகளை உருவாக்கும்
காற்று தொலை தூரம்
சுமந்து போய்
மறுபடியும் விதைக்கும்
மழையும் பனியும் போஷித்து வளர்க்கும்"
-வால்ட் விட்மன்

No comments: